முகப்பு · வழிகாட்டிகள் · இங்கிருந்து தொடங்குங்கள்: கடையை செட்டப் செய்யுங்கள்
இங்கிருந்து தொடங்குங்கள்: கடையை செட்டப் செய்யுங்கள்

வகைகளையும் brand-களையும் சேர்க்கவும்

உங்கள் பொருட்களுக்கான குழுக்களும் brand பெயர்களும். பொருளைச் சேமிக்க இரண்டும் வேண்டும்.

படிகள்

  1. Catalog → Manage Product Category திறக்கவும். Product Categories பக்கத்தில் உங்களிடம் உள்ள எல்லா குழுக்களும் தெரியும்.
  2. New Category அழுத்தி Category Name (எ.கா. Biscuits) டைப் செய்யவும். விரும்பினால் Description, icon சேர்த்து Save Category அழுத்தவும்.
  3. Catalog → Manage Brand திறந்து New Brand அழுத்தி Brand Name டைப் செய்து Save Brand அழுத்தவும்.
  4. நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு குழுவுக்கும், ஒவ்வொரு brand-க்கும் ஒரு வரி சேர்க்கவும். ஒரே பெயரை இரண்டு முறை ஏற்காது.
  5. பொருள் படிவத்தில் Product Category, Brand Name dropdown-களில் தேடல் பெட்டி உண்டு. உங்கள் பெயர்கள், Suggested for your business பெயர்கள், புதிதாக டைப் செய்யும் பெயர் (சேமிக்கும்போது சேரும்) தெரியும்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

பொருளுக்கு Brand Name வேண்டும். auto SKU ஆன் என்றால் brand இல்லாமல் சேமித்தால் SKU generation error: Brand is missing or invalid வரும். brand இல்லாத பொருட்களுக்கு Local போல ஒரு brand வைக்கவும்.
எந்த பொருளாவது பயன்படுத்தும் வகை அல்லது brand-ஐ நீக்க முடியாது; பக்கம் மறுத்துச் சொல்லும். எழுத்துப்பிழையை Edit மூலம் திருத்துங்கள்.
Edit பெயர், விளக்கம், icon-ஐ மட்டும் மாற்றும்; பழைய bill-களைத் தொடாது. graph பட்டன் அந்த வகை அல்லது brand-இன் விற்பனை ரிப்போர்ட்டைத் திறக்கும்.

பயன்படுத்தப்படும் வார்த்தைகள்

வார்த்தைஅர்த்தம்
Productsஇந்த வகையில் எத்தனை கேட்டலாக் பொருட்கள் உள்ளன.
Purchasedவாங்கிய எண்ணிக்கை, சப்ளையருக்குத் திருப்பியதைக் கழித்து.
Soldவிற்ற எண்ணிக்கை, வாடிக்கையாளர் திருப்பியதைக் கழித்து.
Processingஆர்டர் எடுத்து இன்னும் டெலிவரி ஆகாத எண்ணிக்கை.
Availableகையில் இன்னும் உள்ள எண்ணிக்கை. Brands-ல் Processing இதிலிருந்து கழிக்கப்படும்; Product Categories-ல் கழிக்கப்படாது.
Suggestedஉங்கள் தொழிலுக்காகத் தரப்படும் பெயர். பொருளைச் சேமிக்கும் வரை உங்கள் பட்டியலில் எதுவும் சேராது.
Show unusedஎந்த பொருளும் பயன்படுத்தாத வகை, brand-களைக் காட்டும். பொருள் பயன்படுத்தும் வரை அவை பட்டியலில் மறைந்திருக்கும்.

icon கட்டாயமில்லை: JPEG அல்லது PNG, சுமார் 150KB வரை, சதுரமாக (சுமார் 100x100 px) இருந்தால் நன்றாக இருக்கும். Product Categories தேடல் பெயரிலும் விளக்கத்திலும் தேடும்; Brands-ல் பெயரில் மட்டும். Product Categories, Brands பொருள் பயன்படுத்தும் பெயர்களை மட்டும் காட்டும்; மற்றவை Show unused பின்னால் இருக்கும். ஆன்லைன் கடை மெனுவில் பொருள் ஆன் செய்யப்பட்ட வகைகள் மட்டுமே தெரியும். dropdown கடைசியில் உள்ள + Add Category, + Add Brand முழு பக்கத்தைத் திறக்கும்.

இந்தப் பிரிவில் அடுத்ததுஉங்கள் முதல் பொருளைச் சேர்க்கவும்

இந்தப் பிரிவில் மேலும்

Saathi360-இல் முயற்சி செய்யுங்கள்

30 நாள் இலவச டிரையல், எல்லா வசதிகளும், கார்டு தேவையில்லை.

இலவச டிரையலைத் தொடங்கு டெமோ புக் செய்